நூல்கள்›அகநானூறு›பாடல் 2090

பாடல் 2090

நக்கீரனார்

கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற

நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,

தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,

பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,

குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு . . . .

இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்

தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,

காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,

பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,

குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! . . . .

இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்

பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்

கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க

உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த

இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து . . . .

உரும் இசைப் புணரி உடைதரும்

பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

நித்திலக் கோவை

← பாடல் 2089பாடல் 2091 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்