நூல்கள்›அகநானூறு›பாடல் 2088

பாடல் 2088

நக்கீரர்

குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,

இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய

கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,

நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,

அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, . . . .

பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,

அம் கண் பெண்ணை அன்புற நரலும்

சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,

கழி சேர் புன்னை அழி பூங் கானல்,

தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் . . . .

மணவா முன்னும் எவனோ தோழி!

வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்

தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,

சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்

மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, . . . .

பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?

மணிமிடைபவளம்

← பாடல் 2087பாடல் 2089 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்