நூல்கள்›அகநானூறு›பாடல் 2071

பாடல் 2071

பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்

மதி அரும்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்

பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!

யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்

எய்யா வரி வில் அன்ன பைந் தார்,

செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, . . . .

பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்

வளை சிறை வாரணம் கிளையொடு கவர,

ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்

நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை

மை படு விடரகம் துழைஇ, ஒய்யென . . . .

அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி

பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்கு உறுத்தலின்,

இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்

உரும் இறை கொண்ட உயர்சிமைப்

பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2070பாடல் 2072 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்