நூல்கள்›அகநானூறு›பாடல் 2067

பாடல் 2067

வீரை வெளியன் தித்தனார்

பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!

இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,

போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து

அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்

அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் . . . .

கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்

மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்

கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என

மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,

பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, . . . .

தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,

அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,

குறமகள் காக்கும் ஏனல்

புறமும் தருதியோ? வாழிய, மழையே!

மணிமிடைபவளம்

← பாடல் 2066பாடல் 2068 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்