நூல்கள்›அகநானூறு›பாடல் 2047

பாடல் 2047

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,

பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;

ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!

பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த

நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் . . . .

கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்

உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,

அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;

ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்

தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, . . . .

ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்

வாள் வரி வயப் புலி கல் முழை உரற,

கானவர் மடிந்த கங்குல்;

மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2046பாடல் 2048 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்