பாடல் 2042
கழார்க் கீரன் எயிற்றியார்
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
தண் மழை பொழிந்த தாழ்பெயல் கடை நாள்,
எமியம் ஆக, துனி உளம் கூரச்,
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
பெரு நசை உள்ளமொடு வருதிசை நோக்கி . . . .
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி! புனற் கால் . . . .
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினை விதுப் புறுநர் உள்ளலும் உண்டே!
மணிமிடைபவளம்