பாடல் 2040
மதுரைப் புல்லங் கண்ணனார்
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி . . . .
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோள் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல், . . . .
அம்மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல்வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே.
மணிமிடைபவளம்