நூல்கள்›அகநானூறு›பாடல் 2016

பாடல் 2016

உறையூர் முதுகூத்தனார்

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட

சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,

களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்

சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே

வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர் . . . .

இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,

வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று

உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,

வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் . . . .

தீ இல் அடுப்பின் அரங்கம் போல,

பெரும் பாழ் கொண்டன்று, நுதலே; தோளும்,

தோளா முத்தின் தெண் கடல் பொருநன்

திண் தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன்

நல் எழில் நெடு வேய் புரையும் . . . .

தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

மணிமிடைபவளம்

← பாடல் 2015பாடல் 2017 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்