நூல்கள்›அகநானூறு›பாடல் 1979

பாடல் 1979

உலோச்சனார்

அரையுற்று அமைந்த ஆரம் நீவி,

புரையப் பூண்ட கோதை மார்பினை,

நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,

எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.

பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த . . . .

கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த

கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்

ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,

ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த

ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் . . . .

பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,

பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்

புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை

வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன

அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் . . . .

வைகுறு விடியல் போகிய எருமை

நெய்தல் அம் புது மலர் மாந்தும்

கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!

களிற்றியானை நிரை

← பாடல் 1978பாடல் 1980 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்