நூல்கள்›அகநானூறு›பாடல் 1971

பாடல் 1971

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,

படு மழை பொழிந்த பானாட் கங்குல்,

குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்

செங் கண் இரும் புலி குழுமும் சாரல்

வாரல் வாழியர், ஐய! நேர் இறை . . . .

நெடு மென் பணைத் தோள் இவளும் யானும்

காவல் கண்ணினம் தினையே; நாளை

மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்

ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,

தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை . . . .

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்

திருமணி விளக்கின் பெறுகுவை

இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே!

களிற்றியானை நிரை

← பாடல் 1970பாடல் 1972 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்