நூல்கள்›அகநானூறு›பாடல் 1969

பாடல் 1969

மதுரை மருதன் இளநாகனார்

மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி

இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்

தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,

சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,

இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் . . . .

வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,

தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,

'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?

அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது

பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர் . . . .

இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,

கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,

'உறும்' எனக் கொள்குநர்அல்லர்

நறு நுதல் அரிவை பாசிழை விலையே!

களிற்றியானை நிரை

← பாடல் 1968பாடல் 1970 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்