பாடல் 1948
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் . . . .
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் . . . .
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் . . . .
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே . . . .
களிற்றியானை நிரை