பாடல் 1940
மாமூலனார்
'நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல் வாழி, தோழி! தாழாது . . . .
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் . . . .
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி . . . .
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே
களிற்றியானை நிரை