நூல்கள்›அகநானூறு›பாடல் 1920

பாடல் 1920

குன்றியனார்

வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,

கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்

எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,

நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,

குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர . . . .

அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்

ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,

கோழிணர் எதிரிய மரத்த, கவினி,

காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,

நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் . . . .

நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த

நல் தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ

மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்

தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன

அம் கலுழ் மாமை கிளைஇய . . . .

நுண் பல் தித்தி, மாஅயோளே?

களிற்றியானை நிரை

← பாடல் 1919பாடல் 1921 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்