நூல்கள்›கலித்தொகை›பாடல் 1843

பாடல் 1843

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த

ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ

புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,

வதுவை அயர்வாரைக் கண்டும் 'மதி அறியா

ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ . . . .

தோழி! அவனுழைச் சென்று;

சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி;

'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா!

நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;

நினக்கு வருவதாக் காண்பாய்' அனைத்தாகச் . . . .

சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு;

தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,

எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்

பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய

வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த . . . .

திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த

ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்

தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த

விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,

அரு நெறி ஆயர் மகளிர்க்கு . . . .

இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே.

முல்லைக் கலி

← பாடல் 1842பாடல் 1844 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்