நூல்கள்›கலித்தொகை›பாடல் 1841

பாடல் 1841

யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்

பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்

கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு

சொல்லல் ஓம்பு என்றார், எமர்;

எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் . . . .

நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,

விடாஅல்; ஓம்பு' என்றார், எமர்;

கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர்

பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட,

நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும் . . . .

வல்லர், எமர்கண் செயல்

ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல்,

வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை

இகழ்ந்தாரே அன்றோ, எமர்;

ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு; . . . .

'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்!

நின்னை, "என் முன் நின்று,

சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ

புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல

முயங்கு; நின் முள் எயிறு உண்கும் 'எவன்கொலோ? . . . .

மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்

வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின்,

சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின்

ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள்

சாயினும், ஏஎர் உடைத்து.' . . . .

முல்லைக் கலி

← பாடல் 1840பாடல் 1842 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்