நூல்கள்›கலித்தொகை›பாடல் 1836

பாடல் 1836

எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்

புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்

கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்

பல் ஏறு பெய்தார் தொழூஉ;

தொழுவத்து, . . . .

சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்

கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய

ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்

கூழையுள் வீழ்ந்தன்று மன்;

அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது . . . .

கெட்டனள், என்பவோ, யாய்;

இஃதொன்று கூறு;

கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!

அவன் கண்ணி அன்றோ, அது;

'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் . . . .

கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,

செய்வது இலாகுமோ மற்று;

எல்லாத் தவறும் அறும்;

ஓஒ! அஃது அறுமாறு;

'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், . . . .

நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,

நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,

அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'

அன்னையோ,

ஆயர் மகனையும் காதலை, கைம்மிக . . . .

ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ

நீ உற்ற நோய்க்கு மருந்து;

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!

வருந்துவேன் அல்லனோ, யான்;

வருந்தாதி; . . . .

மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்

கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,

தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்

பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு

ஐயன்மார் எல்லாம் ஒருங்கு. . . . .

முல்லைக் கலி

← பாடல் 1835பாடல் 1837 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்