நூல்கள்›கலித்தொகை›பாடல் 1809

பாடல் 1809

நயம் தலை மாறுவார் மாறுக; மாறா,

கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்,

பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி

திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப்

பவழம் புனைந்த பருதி சுமப்ப, . . . .

கவழம் அறியா நின் கை புனை வேழம்

புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,

அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே

வருக! எம் பாக மகன்!

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் . . . .

தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே,

'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்

வளை நெகிழ்பு யாம் காணுங்கால்;

ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்

தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, . . . .

உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்

எவ்வ நோய் யாம் காணுங்கால்;

ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை

அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே,

நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் . . . .

அல்குல் வரி யாம் காணுங்கால்;

ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும்,

போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம்

ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்

தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய . . . .

கோதை பரிபு ஆட; காண்கும்.

மருதக் கலி

← பாடல் 1808பாடல் 1810 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்