நூல்கள்›கலித்தொகை›பாடல் 1792

பாடல் 1792

நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்

தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப்

போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம்

காக்கும் இடம் அன்று, இனி

எல்லா! எவன் செய்வாம்? . . . .

பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய்

விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல்

கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக

இருந்தாயோ?' என்று ஆங்கு இற;

அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் . . . .

மருந்து நீ ஆகுதலான்;

இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள்

என்னாமை என் மெய் தொடு

இஃதோ? அடங்கக் கேள்:

நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா, . . . .

என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்

தன்னொடு நின்று விடு.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1791பாடல் 1793 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்