நூல்கள்›கலித்தொகை›பாடல் 1783

பாடல் 1783

"கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற,

பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை,

தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!

அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன,

நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி, . . . .

பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,

நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்

விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;

நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு,

செறாஅச் செங் கண் புதைய வைத்து, . . . .

பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;

தொய்யில் இள முலை இனிய தைவந்து,

தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும்

மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்

அதனால், . . . .

அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர்

அருங் கடி நீவாமை கூறின், நன்று' என

நின்னொடு சூழ்வல், தோழி! 'நயம் புரிந்து,

இன்னது செய்தாள் இவள்' என,

மன்னா உலகத்து மன்னுவது புரைமே. . . . .

குறிஞ்சிக் கலி

← பாடல் 1782பாடல் 1784 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்