நூல்கள்›கலித்தொகை›பாடல் 1753

பாடல் 1753

'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்

அஞ்சியது ஆங்கே அணங்காகும்'என்னும் சொல்

இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற நின் கேள்

புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,

'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, . . . .

மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,

பாயல் கொண்டு என் தோள் கனவுவார், 'ஆய் கோல்

தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள்,

கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ

இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் . . . .

நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்றெஞ்,

செய் பொருள் முற்றும் அளவு?' என்றார்; ஆயிழாய்!

தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி

யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின்,

'தொய்யில் துறந்தார் அவர்' என, தம்வயின், . . . .

நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு

போயின்று, சொல், என் உயிர்.

பாலைக் கலி

← பாடல் 1752பாடல் 1754 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்