நூல்கள்›கலித்தொகை›பாடல் 1747

பாடல் 1747

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,

பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,

என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்

மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; . . . .

ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;

இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்

வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள்,

ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை

ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும், . . . .

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,

சென்ற இளமை தரற்கு!

பாலைக் கலி

← பாடல் 1746பாடல் 1748 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்