நூல்கள்›கலித்தொகை›பாடல் 1740

பாடல் 1740

'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,

பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,

புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என,

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்

வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி: . . . .

'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,

கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள்,

துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே

'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், . . . .

துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,

அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை

மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே

'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,

துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள், . . . .

இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே

என ஆங்கு

இனை நலம் உடைய கானம் சென்றோர்

புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின் . . . .

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே.

பாலைக் கலி

← பாடல் 1739பாடல் 1741 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்