நூல்கள்›கலித்தொகை›பாடல் 1736

பாடல் 1736

வேனில் உழந்த வறிது உயங்கும் ஒய் களிறு

வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்

கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று

உசாவுகோ-ஐய! சிறிது;-

நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின் . . . .

கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;

இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல்,

மை இல் வாண் முகம் பசப்பு ஊரும்மே;

நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி,

புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; . . . .

இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,

இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே;

நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய,

வலம் படு திகிரி வாய் நீவுதியே;

இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், . . . .

இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே

என நின்,

செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,

தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்

இன் உயிர் தருதலும் ஆற்றுமோ- . . . .

முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

பாலைக் கலி

← பாடல் 1735பாடல் 1737 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்