நூல்கள்›நற்றிணை›பாடல் 1695

பாடல் 1695

கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேரகோவனார்

அருங் கடி அன்னை காவல் நீவி,

பெருங் கடை இறந்து, மன்றம் போகி,

பகலே, பலரும் காண, வாய் விட்டு

அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,

சென்மோ வாழி - தோழி! - பல் நாள் . . . .

கருவி வானம் பெய்யாதுஆயினும்,

அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்

வான் தோய் மா மலைக் கிழவனை,

'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.

குறிஞ்சி

← பாடல் 1694பாடல் 1696 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்