நூல்கள்›நற்றிணை›பாடல் 1677

பாடல் 1677

பெருங்குன்றூர் கிழார்

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை

மாதிர நனந் தலை புதையப் பாஅய்,

ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,

வான் புகு தலைய குன்றம் முற்றி,

அழி துளி தலைஇய பொழுதில், புலையன் . . . .

பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,

அருவி இழிதரும் பெரு வரை நாடன்,

'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப்

பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி

வேனில் தேரையின் அளிய . . . .

காண வீடுமோ - தோழி! - என் நலனே?

குறிஞ்சி

← பாடல் 1676பாடல் 1678 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்