நூல்கள்›நற்றிணை›பாடல் 1653

பாடல் 1653

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை

நடுவணதுவேதெய்ய - மடவரல்

ஆயமும் யானும் அறியாது அவணம்

ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்

கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை . . . .

நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:

புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த

மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,

வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்

தெரி மணி கேட்டலும் அரிதே . . . .

வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.

நெய்தல்

← பாடல் 1652பாடல் 1654 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்