நூல்கள்›நற்றிணை›பாடல் 1649

பாடல் 1649

வினைத்தொழில் சோகீரனார்

ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்

தாது உளர் கானல் தவ்வென்றன்றே;

மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,

கூகைச் சேவல் குராலோடு ஏறி,

ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் . . . .

அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;

பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,

தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்

சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,

மீன் கண் துஞ்சும் பொழுதும் . . . .

யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?

நெய்தல்

← பாடல் 1648பாடல் 1650 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்