நூல்கள்›நற்றிணை›பாடல் 1611

பாடல் 1611

கழார்க் கீரன் எயிற்றியார்

மாசு இல் மரத்த பலி உண் காக்கை

வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,

வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்

நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்

அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் . . . .

விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,

மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,

தாம் நம் உழையராகவும், நாம் நம்

பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,

துஞ்சாம் ஆகலும் அறிவோர் . . . .

அன்பிலர்- தோழி! - நம் காதலோரே.

பாலை

← பாடல் 1610பாடல் 1612 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்