நூல்கள்›நற்றிணை›பாடல் 1594

பாடல் 1594

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,

வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,

அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்

மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்

வீ பெய் கூந்தல் வீசு வளி உளர . . . .

ஏகுதி - மடந்தை! - எல்லின்று பொழுதே:

வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த

ஆ பூண் தெண் மணி இயம்பும்,

ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

பாலை

← பாடல் 1593பாடல் 1595 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்