நூல்கள்›நற்றிணை›பாடல் 1591

பாடல் 1591

சேந்தன் பூதனார்

அருளிலர்வாழி - தோழி! - மின்னு வசிபு

இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு

வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,

நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,

தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, . . . .

களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்

வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்

சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,

எருவை நறும் பூ நீடிய

பெரு வரைச் சிறு நெறி வருதலானே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1590பாடல் 1592 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்