நூல்கள்›நற்றிணை›பாடல் 1588

பாடல் 1588

நக்கீரர்

பல் பூங் கானல் பகற்குறி மரீஇ

செல்வல் - கொண்க! - செறித்தனள் யாயே

கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்

திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,

பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த . . . .

கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,

அகல் அங்காடி அசை நிழல் குவித்த

பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை

தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்

மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் . . . .

நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே.

நெய்தல்

← பாடல் 1587பாடல் 1589 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்