நூல்கள்›நற்றிணை›பாடல் 1580

பாடல் 1580

துரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

நகுகம் வாராய் - பாண! - பகுவாய்

அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்

தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்

பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு

காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் . . . .

முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,

பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்

நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,

வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,

'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! . . . .

மருதம்

← பாடல் 1579பாடல் 1581 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்