நூல்கள்›நற்றிணை›பாடல் 1545

பாடல் 1545

மதுரைச் சுள்ளம் போதனார்

குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,

பகல் கெழு செல்வன் குடமலை மறைய,

புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,

இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,

மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் . . . .

நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;

கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,

இன்று நீ இவணை ஆகி, எம்மொடு

தங்கின் எவனோதெய்ய? செங்கால்

கொடு முடி அவ் வலை பரியப் போகிய . . . .

கோட் சுறாக் குறித்த முன்பொடு

வேட்டம் வாயாது எமர் வாரலரே.

நெய்தல்

← பாடல் 1544பாடல் 1546 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்