நூல்கள்›நற்றிணை›பாடல் 1534

பாடல் 1534

மள்ளனார்

'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை

குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?

குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய

நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?

இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் . . . .

கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என,

யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,

தான் செய் குறி நிலை இனிய கூறி,

ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,

உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் . . . .

கொடிச்சி செல்புறம் நோக்கி,

விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

குறிஞ்சி

← பாடல் 1533பாடல் 1535 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்