பாடல் 1515
ஆசிரியர் அறியப்படவில்லை
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,
காமம் கைம்மிக, கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின்- பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, . . . .
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய . . . .
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால்- நோகோ யானே.
குறிஞ்சி