பாடல் 1473
கண்ணகாரன் கொற்றனார்
ஐதே கம்ம யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் . . . .
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்;
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. . . . .
பாலை