நூல்கள்›நற்றிணை›பாடல் 1446

பாடல் 1446

கந்தரத்தனார்

'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்

தாம் அறிந்து உணர்க' என்பமாதோ;

வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,

இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,

சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் . . . .

மலை கெழு நாடன் கேண்மை, பலவின்

மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்

விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்

சேணும் சென்று உக்கன்றே அறியாது

ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த . . . .

குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்

இன்னும் ஓவார், என் திறத்து அலரே!

குறிஞ்சி

← பாடல் 1445பாடல் 1447 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்