நூல்கள்›நற்றிணை›பாடல் 1356

பாடல் 1356

சாத்தந்தையார்

நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-

செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை

விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்

பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,

சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் . . . .

முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு

கெடு துணை ஆகிய தவறோ?- வை எயிற்று,

பொன் பொதிந்தன்ன சுணங்கின்,

இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே.

பாலை

← பாடல் 1355பாடல் 1357 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்