நூல்கள்›நற்றிணை›பாடல் 1339

பாடல் 1339

பாலை பாடிய பெருங்கடுங்கோ

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்

வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,

அலமரல் வருத்தம் தீர, யாழ நின்

நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,

பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி . . . .

சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,

நிழல் காண்தோறும் நெடிய வைகி,

மணல் காண்தோறும் வண்டல் தைஇ,

வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!

மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் . . . .

நறுந் தண் பொழில, கானம்;

குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

பாலை

← பாடல் 1338பாடல் 1340 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்