நூல்கள்›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›குறள் 2058

குறள் 2058

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,

வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,

துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டுச்,

சிறு கண் யானை நெடுங்கை நீட்டி

வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, . . . .

கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்

விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்

நல் நிலை பொறித்த கல் நிலை அதர,

அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்

சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை, . . . .

முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,

குவளை நாள் மலர் புரையும் உண் கண், இம்

மதி ஏர் வாள் நுதல் புலம்ப,

பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?

மணிமிடைபவளம்

← குறள் 2057குறள் 2059 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்