நூல்கள்›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›குறள் 2057

குறள் 2057

பரணர்

வயிரத் தன்ன வை ஏந்து மருப்பின்,

வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி

பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,

நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்

பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, . . . .

பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு,

யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்

பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,

வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து

அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, . . . .

பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர,

கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,

கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு

உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட்

பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், . . . .

தவல் இல் உலகத்து உறைஇயரோ - தோழி!

எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்

கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத்

தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என,

கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை . . . .

முன் தான் கண்ட ஞான்றினும்

பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.

மணிமிடைபவளம்

← குறள் 2056குறள் 2058 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்