நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›நாடு

1.நாடு

10 குறள்கள்

731விளக்கம் →

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

732விளக்கம் →

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.

733விளக்கம் →

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.

734விளக்கம் →

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.

735விளக்கம் →

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

736விளக்கம் →

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.

737விளக்கம் →

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

738விளக்கம் →

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.

739விளக்கம் →

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.

740விளக்கம் →

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.

அரண் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்