நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›பாயிரவியல்›ஒழுக்கமுடைமை

10.ஒழுக்கமுடைமை

10 குறள்கள்

131விளக்கம் →

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

132விளக்கம் →

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

133விளக்கம் →

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

134விளக்கம் →

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

135விளக்கம் →

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

136விளக்கம் →

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.

137விளக்கம் →

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

138விளக்கம் →

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

139விளக்கம் →

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

140விளக்கம் →

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

← அடக்கமுடைமைபிறனில் விழையாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்