நூல்கள்›பரிபாடல்›பாடல் 2511

பாடல் 2511

வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,

விளிவு இன்று, கிளையொடு மெல் மலை முற்றி,

தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;

ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,

அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய . . . .

தகரமும், ஞாழ்லும், தாரமும், தாங்கி,

நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்

வளி வரல் வையை வரவு.

வையை

← பாடல் 2510பாடல் 2512 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்