நூல்கள்›பரிபாடல்›பாடல் 2502

பாடல் 2502

மா அயோயே! மாஅயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், . . . .

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,

மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் . . . .

மாயா வாய்மொழி உரைதர வலந்து:

'வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,

நீ' என பொழியுமால், அந்தணர் அரு மறை.

திருமால்

← பாடல் 2501பாடல் 2503 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்