பாடல் 2409
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான், ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர் நிறங் கொண்ட களிறு அட்டு ஆனான்
முன் நாள் வீழ்ந்த உரவோர் மகனே, . . . .
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.
உரவோர் மகனே!