நூல்கள்›புறநானூறு›பாடல் 2407

பாடல் 2407

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,

மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்

நன்மை நிறைந்த நயவரு பாண!

சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்

வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; . . . .

வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை

சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;

உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்

ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்

புன்தலை மடப்பிடி நாணக், . . . .

குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.

நாணின மடப்பிடி!

← பாடல் 2406பாடல் 2408 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்