பாடல் 2229
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய், நின்னாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ,
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன் முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் . . . .
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப் பெயர்த் திட்ட வேலினும் பலவே.
சூல் பத்து ஈனுமோ?