நூல்கள்›புறநானூறு›பாடல் 2164

பாடல் 2164

மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப

இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,

சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,

உழவர் ஓதை மறப்ப, விழவும்

அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, . . . .

உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,

இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்

புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,

தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த

புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் . . . .

வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,

நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!

நாணமும் பாசமும்!

← பாடல் 2163பாடல் 2165 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்